×

உ.பி.யில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜ கைப்பற்றும்: கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் பேட்டி

அலிகர்: உத்தரபிரதேசத்தில் 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்று கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் கூறினார். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது. இங்குள்ள முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங், 73 அட்ராலி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில் ‘வருகிற சட்டசபை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘மீண்டும் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உத்தரபிரதேச தேர்தலில் பாஜ 300 இடங்களுக்கு மேல் பெரும்பான்மை பெறும் என்று நம்புகிறேன். ‘பாபுஜி’ (முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்) இன்று இல்லை, ஆனால் அவர் வழிகாட்டியபடி நான் பணியாற்றுவேன்’ என்றார்….

The post உ.பி.யில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜ கைப்பற்றும்: கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : U. GP Baja ,Sandip Singh ,Kallyan Singh ,Chandip Singh ,Uttar ,Pradesh ,Uttar Pradesh Assembly ,
× RELATED அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர்...