- முதலமைச்சர் மு. கே.
- ஸ்டாலின்
- அன்புமணி
- ராமதாஸ்
- நடிகர்
- ரஜினி
- சென்னை
- திமுகா
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- மு. கே. ஸ்டாலின்
- கே
- கூட்டணி
- தின மலர்
சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறிய வாழ்த்து செய்தியில்;
முதலமைச்சருக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் வாழ்த்து:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முத்தரசன், பெ.சண்முகம், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து:
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது இனிய வாழ்த்துகள்.
சனாதன ஃபாசிசத்தை வீழ்த்தும் கருத்தியல் களத்தில் தங்களின் தலைமைத்துவம் இன்றியமையாதது.
இந்திய அளவில் இந்தி அல்லாத பிறமொழி தேசிய இனங்களை ஐக்கியப்படுத்துவது வரலாற்றுத் தேவையாகும்.
அதனையொட்டி தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் உற்றத் துணையிருப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து:
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 72ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
முதல்வருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து:
72வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!
முதலமைச்சருக்கு பவன் கல்யாண் பிறந்தநாள் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீடுழி வாழ, மக்கள் சேவையை தொடர எனது வாழ்த்துகள் . இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சருக்கு எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று, தமிழ்நாடு மக்களுக்கு சேவையாற்றிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள், அன்புமணி, ராமதாஸ், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.
