×

மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

 

தேனி, மார்ச் 1: வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தேனியில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பில் தேனி நகர் பங்களாமேடு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல்லாபத்ரி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

The post மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Humanist People's Party ,Theni ,Union government ,Theni District Humanist People's Party ,Banglamedu ,Theni Nagar… ,Dinakaran ,
× RELATED தேனியில் வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு