- கொடைக்கானல்
- தமிழ்நாடு காமன்வெல்த் மையம்
- கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
- ஒருங்கிணைப்பாளர்
- முத்து மீனலோசனி
- பல்கலைக்கழக
- கட்டுப்பாட்டாளர்
- கிளாரா தேன்மொழி
கொடைக்கானல், மார்ச் 1: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு காமன்வெல்த் மையத்தின் சார்பில் பிரெஞ்ச் கலாச்சார இசை நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முத்து மீனலோசனி வரவேற்றார். பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி தலைமை வகித்தார். சிஸ்ககன் என்ற இந்த பிரெஞ்ச் கலாச்சார இசை நிகழ்ச்சி ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் மீண்டும் இணைதல் என்று கருத்தில் பாடல்கள் பாடினர்.
இந்த பாடல்கள் பிரெஞ்ச் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது. பிரெஞ்ச் இசை குழுவின் தலைவர் கில்பர்ட், குழுவினர்கள் பவுனியா, சில்வி, கோலின், எடிசன் ஆகியோருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இதில் பல்கலை பேராசிரியர்கள், மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post கொடைக்கானலில் பிரெஞ்ச் கலாச்சார இசை நிகழ்ச்சி appeared first on Dinakaran.
