- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- திருச்செந்தூர்
- திமுக
- ஜனாதிபதி
- தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- VUCI
திருச்செந்தூர், மார்ச் 1: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் திருச்செந்தூரில் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் வஉசி திடல் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமை வகித்து அறுசுவை விருந்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், பொருளாளர் ராமநாதன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ
ஆனந்தி, நகர செயலாளர் வாள் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 5 ஆயிரம் பேருக்கு திருச்செந்தூரில் விருந்து appeared first on Dinakaran.
