×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) ஒன்றியக் குழு கூட்டம்

 

தஞ்சாவூர், மார்ச் 1: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) தஞ்சை மாநகர ஒன்றியக் குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) தஞ்சை மாநகர ஒன்றியக் குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாநகர பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை மாநகர ஒன்றிய செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் சமர்ப்பித்தார். தமிழ் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி கலந்து கொண்டு கட்சியின் எதிர்கால கடமைகள் குறித்தும், மாநகர ஒன்றிய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் வழங்கி கட்சி செயல்பாடுகள் குறித்தும் சிறப்புறையாற்றினார்.

இதில், மாநகர துணை செயலாளர் சூரி.ரவிச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் டேவிட், மாநகர ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணபதி, பெட்ரிக் ஜெயக்குமார், மோகன், தவமூர்த்தி, ராஜரெத்தினம், முகமதுஅலி, பிரபாகரன், மாலா, ராஜசேகர், ராஜராஜன், காமராஜ், ராஜா, ஜான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில், வரும் மார்ச் 8ம் தேதி அகில உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்கள் பங்கேற்கும் பேரணியை தஞ்சையில் பிரமாண்டமாக நடத்த வேண்டும். தஞ்சை மேரீஸ்கார்னர் மேம்பாலத்தை ராமநாதன் ரவுண்டானா வரை விரிவுபடுத்திடக் கோரி வரும் 10ம் தேதி தஞ்சை பி.எஸ்.என். எல் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டாக்டர் பழநி. செல்வகுமார் நன்றி கூறினார்.

 

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) ஒன்றியக் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist ,Party of India (ML) Union Committee Meeting ,Thanjavur ,Communist Party of India ,ML ,City ,Union Committee ,City Treasurer ,Ravichandran ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர்...