×

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

 

சேந்தமங்கலம், மார்ச்.1: காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நஞ்சுண்டாபுரம் அரசு பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. சேந்தமங்கலம் ஒன்றியம் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நஞ்சுண்டாபுரம் அரசு தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்து ஆண்டறிக்கை படித்தார். வட்டார கல்வி அலுவலர் அருள் புனிதன் முன்னிலை வகித்தார். இடைநிலை ஆசிரியர் சுந்தரம் வரவேற்று பேசினார். விழாவில், பொன்னுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பேச்சு, கட்டுரை, ஓவியம், திருக்குறள் ஒப்பித்தல், பாட்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் நூற்றாண்டு கல்வெட்டை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், பேரூர் திமுக செயலாளர் முருகேசன், பேரூராட்சி தலைவர் பாப்பு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பூங்கொடி, துணை தலைவர் சசிகலா, உறுப்பினர்கள் ரகுபதி, சாரதா, ஆசிரியர்கள் செல்வகுமார், அமுதா, செல்லம்மாள், முன்னாள் ஆசிரியர்கள் ஜெயசேகரன், சாமிதுரை, சாந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர் கஸ்தூரி திலகம் நன்றி கூறினார்.

The post அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Kalapanayakkanpatti Town Panchayat Nanjundapuram Government School ,Kalapanayakkanpatti Town Panchayat Nanjundapuram Government Primary School ,Senthamangalam Union ,headmaster ,Thenmozhi ,Centenary ,Dinakaran ,
× RELATED மாதேஸ்வரன் எம்பி வீட்டில் தீ விபத்து