×

கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம் r6.50 லட்சத்தில் மழை நீர் வடிகால்

 

கீழ்வேளூர், மார்ச் 1: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், செயல் அலுவலர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் மீனாட்சி, அகிலா, மகேஷ்வரன், பிரியா, ராதிகா, காந்திமதி, பழனிவேல், ராசாத்தி, ரமேஷ்குமார், ஷாஜகான், இலக்கியலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். 15வது நிதி ஆணைய நிபந்தனையற்ற மாநில நிதி முதல் தவணையில் என்.எஸ்.மில் தெருவில் மழை நீர் வடிகால் ரூ.6.50 லட்சம் மதிப்பிலும், மதகடியில் கருமாரி மண்டபம் ரூ.2.42 லட்சம் மதிப்பிலும் அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

The post கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம் r6.50 லட்சத்தில் மழை நீர் வடிகால் appeared first on Dinakaran.

Tags : Kilvellur Town Panchayat ,Kilvellur ,Town Panchayat ,Nagapattinam district ,Town ,Panchayat ,Indira Gandhi Shekhar ,Vice Chairman ,Chandrashekhar ,Executive Officer ,Kugan ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா