அரூர், மார்ச் 1: அரூர் அருகே நரிப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் பங்கேற்று 357 பேருக்கு ₹1.79 கோடி நலஉதவி வழங்கினார்.
அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், நரிப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் சதீஷ் தலைமை வகித்தார். அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 357 பயனாளிகளுக்கு ₹1.79 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசுகையில், ‘பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் வரை பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தர்மபுரி மாவட்ட மக்கள், அரசின் திட்டங்கள் மூலம் சுயதொழில் புரிந்து வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதோடு, தொழில் முனைவோர்களாகவும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களாகவும் மாற்றிக் கொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சின்னசாமி, தனித்துணை கலெக்டர் சுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) இளவரசன், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், தாசில்தார் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post மக்கள் தொடர்பு முகாமில் ₹1.79 கோடி நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.
