×

திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானகொள்ளை

 

தரங்கம்பாடி, மார்ச் 1: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி மயான கொள்ளை நடைபெற்றது.திருக்கடையூர் கீழவீதியில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக சிவராத்திரியையொட்டி மயான கொல்லை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அங்காள பரமேஸ்வரிக்கு நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடந்த பின்னர், கரக புறப்பாடு நடைபெற்றது. கரகம், நான்கு தேர் வீதிகளிலும் வலம் வந்தது. ஊர்வலத்தில் அங்காள பரமேஸ்வலரி வேடமிட்டு வந்தனர். அதன்பின் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

 

The post திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானகொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thirukkadaiyur ,Angala Parameswari Amman Temple ,Tharangambadi ,Angala Parameswari Temple ,Thirukkadaiyur, Mayiladuthurai district ,Maha Shivaratri ,Masimaha Shivaratri ,Angala Parameswari… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி