- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கரூர் மாநகராட்சி
- கரூர்
- மேயர்
- கவிதா கணேசன்
- துணை மேயர்
- தரணி சரவணன்
- ஆணையாளர்
- கே.எம்.சுதா
- வலயக்
- ஜனாதிபதிகள்
- எஸ்.பி. கனகராஜ்
- கா.அன்பரசன் ஆர்.எஸ்.ராஜா
- வெங்கமேடு…
- மாநகராட்சி
- தின மலர்
கரூர், மார்ச் 1: கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் கேஎம்.சுதா, மண்டல தலைவர்கள் எஸ்பி கனகராஜ், கா.அன்பரசன் ஆர்எஸ்.ராஜா, வெங்கமேடு சக்திவேல், மாநகர துணைச் செயலாளர் வெங்கமேடு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மக்களின் சார்பாகவும், மாநகராட்சி மாமன்றத்தின் சார்பாகவும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தடைபட்டிருந்த கரூர் மக்களின் 25 ஆண்டு கால கனவான புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை நீதிமன்றம் வாயிலாக சட்டப் போராட்டம் நடத்தி, தடைகளை முறியடித்து, நீதியை வென்றெடுத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாநகராட்சி மாமன்றத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இம்மாதத்திற்கான சாதாரண மற்றும் அவசரக் கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. சுகாதாரக் குழு தலைவர் பசுவை சக்திவேல், கல்வி குழு தலைவர் வசுமதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கரூர் மாநகராட்சி கூட்டத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.