×

வீட்டு மனைகளுக்கான ஒதுக்கீடு, கிரையப்பத்திரம் பெறுவதற்கு இன்று முதல் 8ம் தேதி வரை சென்னையில் சிறப்பு முகாம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு

சென்னை: வீட்டு மனைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் பட்டா பெறுவதற்கு இன்று முதல் வருகிற 8ம் தேதி வரை சென்னையில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் மனைக்களுக்கான ஒதுக்கீடு பெற்று கிரையப்பத்திரம் பெறுவதற்காகவும் மற்றும் கிரையப்பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் பட்டா பெறுவதற்காக வருவாய்த் துறையுடன் இணைந்து வாரியத்தால் இரண்டாம் கட்டமாக 1ம் தேதி(இன்று) முதல் வருகிற 8ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

* மார்ச் 1ம் தேதி (இன்று) மாதவரம் சட்டமன்ற தொகுதி கே.கே.தாழை திட்டபகுதிக்கு கே.கே.தாழை திட்டப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக குணசேகரன் என்பவரை 9940313831 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* பெரம்பூர் தொகுதி எம்.ஜி.ஆர் நகர் திட்டப்பகுதிக்கு எம்.ஜி.ஆர் நகர் முருகன் கோயில் அருகில் முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக உமாராணி என்பவரை 9940731980 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள
லாம்.
* வில்லிவாக்கம் தொகுதி பாரதி நகர், சத்யா நகர் திட்டப்பகுதிக்கு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள கோயிலில் சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக திவாகரன் என்பவரை 9789816785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* விருகம்பாக்கம் தொகுதி அரங்கநாதன் நகர் திட்டப்பகுதிக்கு பொதுகிணறு அருகில் நாராயணசாமி தெரு அருகில் சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* 3ம் தேதி அன்று கொளத்தூர் தொகுதி மக்காரம் தோட்டம்,கங்கை அம்மன் கோயில், கண்ணகி நகர், டாக்டர் அம்பேத்கர் நகர் திட்டப்பகுதிக்கு அம்பேத்கர் நகர் திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக திவாகரன் என்பவரை 9789816785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* விருகம்பாக்கம் தொகுதி காந்தி நகர் திட்டப்பகுதிக்கு சங்கம் காந்தி நகர் முத்து மாரியம்மன் கோயில் அருகில் சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* அண்ணாநகர் தொகுதி காமராஜ் நகர் ஹால்ஸ் ரோடு திட்டப்பகுதிக்கு திட்டப்பகுதி அருகில் உள்ள கோயிலில் சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக திவாகரன் என்பவரை 9789816785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* 4ம் தேதி அன்று எழும்பூர் தொகுதி கக்கன் காலனி திட்டப்பகுதிக்கு கிருஷ்ண கோயில் அருகில் சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக சத்யஷீலா என்பவரை 9445908965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* மயிலாப்பூர் தொகுதி பைகிராப்ட்ஸ் ரோடு திட்டப்பகுதிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்ட அலுவலகம்-5ல் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக பானுமதி என்பவரை 9790902227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* விருகம்பாக்கம் தொகுதி இந்திராநகர் பகுதிக்கு சங்கம் காந்தி நகர் முத்து மாரியம்மன் கோயில் அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* 5ம் தேதி அன்று பெரம்பூர் தொகுதி கே.எஸ்.எஸ். மடம் திட்டப்பகுதிக்கு கே.எஸ்.எஸ் மடம் சிவன் கோயில் அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக உமாராணி என்பவரை 9940731980 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* அண்ணாநகர் தொகுதி நடுவாங்கரை எம்.ஜி.ஆர் நகர்,என்.பி.கே.காலனி திட்டப்பகுதிக்கு திட்டப்பகுதி அருகில் உள்ள கோயிலில் சிறப்பு முகாம் நடைபெறும். இது தொடர்பாக திவாகரன் என்பவரை 9789816785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* எழும்பூர் தொகுதி காமராஜபுரம் திட்டப்பகுதிக்கு கிருஷ்ணா கோயில் அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக சத்யஷீலா என்பவரை 9445908965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* விருகம்பாக்கம் தொகுதி சாதிக்பாட்ஷா நகர் மற்றும் சேக் அப்துல்லா திட்டப்பகுதிக்கு சங்கம் காந்தி நகர் முத்து மாரியம்மன் கோயில் அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* வரும் 6ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதி பட்டேல் நகர் திட்டப்பகுதிக்கு பட்டேல் நகர் பள்ளி அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக உமாராணி என்பவரை 9940731980 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* எழும்பூர் ெதாகுதி டிரஸ்ட்புரம் திட்டப்பகுதிக்கு டிரஸ்ட்புரம் எட்டாவது தெரு பிள்ளையார் கோயில் அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக சத்யஷீலா என்பவரை 9445908965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* தி.நகர் தொகுதிக்கு சாரங்கபாணி தெரு திட்டப்பகுதிக்கு திட்டப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக பானுமதி என்பவரை 9790902227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* விருகம்பாக்கம் தொகு குலசேகரபும் திட்டப்பகுதிக்கு வேதாதெருவில் சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* வரும் 7ம் தேதி எழும்பூர் தொகுதிக்கு தாஸ்புரம் திட்டப்பகுதிக்கு டிரஸ்ட்புரம் எட்டாவது தெரு பிள்ளையார் கோயில் அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக சத்யஷீலா என்பவரை 9445908965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* விருகம்பாக்கம் தொகுதி முத்தமிழ் நகர் (திலகர் நகர்) திட்டப்பகுதிக்கு பிள்ளையார் கோயில் அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* வருகிற 8ம் தேதி அன்று மயிலாப்பூர் தொகுதி உசேன் நகர் திட்டப்பகுதிக்கு ஈ.சா.ஹைதர்அலிகான் தெரு விளையாட்டு மைதானம் அருகில் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக சத்யஷீலா என்பவரை 9445908965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* விருகம்பாக்கம் தொகுதிக்கு தசரதாபுரம் திட்டப்பகுதிக்கு திட்டப்பகுதி 2வது தெருவில் சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வீட்டு மனைகளுக்கான ஒதுக்கீடு, கிரையப்பத்திரம் பெறுவதற்கு இன்று முதல் 8ம் தேதி வரை சென்னையில் சிறப்பு முகாம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Urban Habitat Development Board ,Tamil Nadu Urban Habitat Development Board… ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்