- 15வது தேசிய சீனியர் பெண்கள் ஹாக்கி போட்டி
- பஞ்ச்குலா, ஹரியானா
- அசாம்
- பீகார்
- ராஜஸ்தான்
- உத்தரகண்ட்
- தெலுங்கானா
- சத்தீஸ்கர்
- தில்லி
- சண்டிகர்
- ஹிமாச்சல பிரதேசம்
* அரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் இன்று 15வது தேசிய சீனியர் பெண்கள் ஹாக்கிப் போட்டி தொடங்குகிறது. அதன் ஏ பிரிவில் அசாம், பீகார், ராஜஸ்தான், உத்தரகாண்ட், தெலுங்கானா அணிகளும், பி பிரிவில் சட்டீஸ்கர், டெல்லி, சண்டீகர், இமாச்சல் பிரதேசம் ஹாக்கி அணிகள் களம் காண இருக்கின்றன. இறுதிப் போட்டி மார்ச் 12ம் தேதி நடைபெறும்.
* மெக்சிகோவில் டபிள்யூடிஏ பெண்கள் மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி நேற்று காலை காலிறுதி ஆட்டங்கள் முடிந்தன. அதில் முன்னணி வீராங்கனையான பிரேசிலின் ஹதாத் மாயா (28வயது, 17வது ரேங்க்) 6-7(8-10), 3-6 என நேர் செட்களில் சுலோவாக் குடியரசின் ரெபாக்கா ஸ்ரம்கோவாவிடம் (28வயது, 40வது ரேங்க்) தோல்வியை தழுவினர். அதனால் டபிள்யூடிஏ 500 தரவரிசை புள்ளிகளுக்கான போட்டியில் முதல் முறையாக ரெபாக்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
* உலகின் பிரபல கால்பந்து கிளப்களான ஸ்பெயினின் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையே முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி நவி மும்பையில் நடைபெற உள்ளது. அங்குள்ள பாட்டீல் அரங்கில் ஏப்ரல் 6ம் தேதி பார்சிலோனா லெஜன்ட்ஸ்-ரியல் மாட்ரிட் லெஜன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது.
The post செய்தித் துளிகள்… appeared first on Dinakaran.