திருச்சி, பிப்.28: பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியாக செலுத்தலாம்.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், tamilnilam.tn.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சரால் நவ.20,2023 ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen portel மூலமாக இணைய வழியாக செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்துள்ளது.
தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும், விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. நில உரிமைதாரா்கள தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும், மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் eservices.tn.gov.in இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
The post நில அளவை கட்டணங்களை இணைய வழியாக செலுத்தலாம் appeared first on Dinakaran.