- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை
- கூட்டு இயக்குனர்
- வித்யா
- தஞ்சாவூர் மாவட்டம்
- பூதலூர்
- கண்டியூர் பிர்கா…
- தின மலர்
தஞ்சாவூர், பிப்.28: நெல் தரிசில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை (பூதலூர் மற்றும் கண்டியூர் பிர்க்கா தவிர) ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அம்மாப்பேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் பிர்க்கா தவிர) வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு ஷேமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரிமீயத் தொகை பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் 1 நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிரிடக்கூடிய பகுதிகளான ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பேராவூரணி, தஞ்சை, அம்மாப்பேட்டை, பூதலூர், திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த பிர்க்காக்களில் நடப்பு ஆண்டிற்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.90 பிரிமீயத் தொகை செலுத்த வேண்டும். நெல்தரிசில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய கடந்த 19ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது காலநீட்டிப்பு செய்யப்பட்டதால் இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும். கடன் பெறாத விவசாயிகள் பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் காப்பீடு செய்யும்போது முன்மொழிவுபடி வத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டிலுள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் தெளிவான முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றைஇணைத்து அளிக்க வேண்டும். இதுவரை நெல் தரிசில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தஞ்சாவூரில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் appeared first on Dinakaran.
