அரியலூர், பிப் 28: அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து வழங்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர இளைஞர்கள் விண்ணப்பிகலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக இந்த இலவச தொழிற்பயிற்சிகள் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட உள்ளது. போட்டோகிராபி, வீடியோகிராபி மற்றும் இருசக்கர வாகனம் பழுதுநீக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படும். பயிற்சியின் போது, செய்முறை பயிற்சி, சீருடை, மூன்று வேளை உணவு, தேநீர் ஆகியவை வழங்கப்படும். மேலும், வௌியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்க்கப்பட உள்ளன. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
இங்கு திறன் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கான நேர்காணல் தேதி: 08.03.2025. பயிற்சி தொடங்கும் நாள்: 10.03.2025. பயிற்சியில் சேர்வதற்கான வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை.
கல்வி தகுதி: எழுத படிக்க தெரிந்தால் போதும். தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, நகல், ரேசன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல்(TC), 100 நாள் வேலை அட்டை நகல், மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ-3, வங்கி கணக்கு புத்தக நகல், தொகுப்பு வீடு கட்டியதற்கான நகல், ஆகியவை ஆகும்.
மேலும் இந்த பயிற்சி தொடர்பான மேல் விபரங்களுக்கு 9944850442, 753996019, 7094470710 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RTO அலுவலகம் பின்புறம்), திருச்சி மெயின் ரோடு, கீழப்பழுர், அரியலூர்- 621707 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post அரியலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி appeared first on Dinakaran.
