×

அல்போன்சா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

 

கருங்கல், பிப்.28: கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை சார்பில், தேசிய கருத்தரங்கு மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான கணித போட்டி நடந்தது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் தொடக்க உரையாற்றினார். முதல்வர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி தலைமை தாங்கி பேசினார்.

கருத்தரங்கில் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியின் கணிதத்துறை தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் லீனா நெல்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். தேசிய கருத்தரங்கை தொடர்ந்து கல்லூரிகளுக்கிடையே கணிதவியல் சார்ந்த போட்டிகள் நடந்தன. விழாவில் கல்லூரி ஆன்மிக வழிகாட்டி அருட்தந்தை அஜின் ஜோஸ் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி , கல்லூரி வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவநேசன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை, சான்றிதழ்களை வழங்கினர். விழா ஏற்பாடுகளை துறை தலைவர் ரம்யா, ஒருங்கிணைப்பாளர் அருண் வில்லியம்ஸ் தலைமையில் துறை பேராசிரியர்கள் இணைந்து செய்து இருந்தனர்.

The post அல்போன்சா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : National Seminar ,St. Alphonsa College ,Karungal ,Mathematics Department ,St. Alphonsa College of Arts and Science ,Susaipuram ,Principal ,Andrani Jose ,Dinakaran ,
× RELATED வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த...