×

ராஜபாளையத்தில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா: நகர்மன்ற தலைவர் பங்கேற்பு

 

ராஜபாளையம், பிப்.28: ராஜபாளையம் நகராட்சி பள்ளியில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராஜபாளையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 8வது வார்டு நகராட்சி பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் கேக் வெட்டினார். குழந்தைகளுக்க மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், சீர்மரபுத்துறை துணைத் தலைவர் ராசா அருண்மொழி,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராஜன், நகரச் செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, நகர்மன்ற துணைத்தலைவி கல்பனா குழந்தைவேலு, நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஒன்றியத் தலைவர் சிங்கராஜ், துணைத்தலைவர் துரைகற்பகராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாசறை ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

The post ராஜபாளையத்தில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா: நகர்மன்ற தலைவர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rajapalayam ,Municipal ,School ,Tamil Nadu ,M.K. Stalin ,Municipal Chairman ,Pavithra Shyam ,8th Ward Municipal School ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி