×

கீவளூர் கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

 

ஸ்ரீபெரும்புதூர், பிப்.28: காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், கீவளூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை, பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைக்கபட்டு வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கீவளூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் வகையில், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நேற்று கீவளூர் ஊராட்சி தலைவர் பழனி தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்த, புகைப்பட கண்காட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம்,மகளிர் உரிமை திட்டம், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, புதுமைப்பெண் திட்டம், தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு போன்ற திட்டங்கள் காட்சிபடுத்தபட்டன. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். நிகழ்வின்போது ஊராட்சி செயலர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கீவளூர் கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Keevalur village ,Sriperumbudur ,Kanchipuram District News and Public Relations Department ,Tamil Nadu News and Public Relations Department ,
× RELATED திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா...