×

இந்துவாக பிறந்தேன்.. இந்துவாக சாவேன் பாஜவுடன் நெருக்கம் காட்டுவதாக வதந்தி பரப்புவதா? துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதிலடி

பெங்களூரு: கோவை ஈஷா மையத்தில் நேற்றுமுன்தினம் நடந்த மகாசிவராத்திரி விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கலந்து கொண்டனர். இது கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் டி.கே.சிவகுமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது, ‘நான் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் விழாவில் கலந்து கொண்டதை சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். நான் மகாகும்பமேளா சென்று நீராடி விட்டு வந்தேன். அப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தினார்கள்.

நான் இந்துவாக பிறந்தேன். இந்துவாக சாவேன். ஆனால் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். கடந்த முறை எனது மகள் ஈஷா சிவராத்திரி விழாவுக்கு சென்றார். அப்போது நான் பாஜவுடன் நெருக்கம் காட்டுகிறேன் என்றும், பாஜவில் சேர இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பினார்கள். காங்கிரஸ் தேசிய தலைவர் பெயர் மல்லிகார்ஜூன கார்கே. அதில் மல்லிகார்ஜூனா என்பது சிவனை குறிப்பிடுகிறது. அதற்காக அவர் பெயரை மாற்றிகொள்வாரா?. இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்துவாக பிறந்தேன்.. இந்துவாக சாவேன் பாஜவுடன் நெருக்கம் காட்டுவதாக வதந்தி பரப்புவதா? துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Chaven ,Baja ,Vice Principal ,D. K. Sivakumar ,Bangalore ,Union Interior Minister ,Amitsha ,Karnataka ,Deputy Prime Minister ,T. K. Shivakumar ,Karnataka Congress ,T. K. ,Shivakumar ,
× RELATED போரை நான் ஆதரிக்கவில்லை; சித்தராமையா...