- மெரிடா
- துபாய் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிகள்
- பதோஷா
- சிட்சிபாஸ்
- WTA மகளிர் மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி
- மெக்ஸிக்கோ
- ஜாக்குலின் கிறிஸ்டியன்
- ஸ்பெயினின்...
- தின மலர்
மெரிடா: டபிள்யூடிஏ பெண்கள் மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடக்கிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நேற்று காலை (இந்திய நேரப்படி) நடந்தன. அதில் ஒரு ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை ஜாக்குலின் கிறிஸ்டியன் (26வயது, 85வது ரேங்க்), ஸ்பெயின் வீராங்கனை பவுளா படோசா (27 வயது, 11வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். அதிரடியாக விளையாடிய பவுளா படோசா 6-2, 6-1 என நேர் செட்களில் எளிதில் வெற்றிப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் படோசா முதல் வீராங்கனையாக காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆர்மேனியாவின் எலினா அவினசான் (22வயது, 45வது ரேங்க்), ஸ்பெயினின் ஜெசிகா போசஸ் (22வயது, 66வது ரேங்க்) ஆகியோர் களமிறங்கினர். இதில் 6-1, 6-4 என நேர் செட்களில் வென்ற எலினா காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். மேலும், ஒரு ஆட்டத்தில் குரோஷிய வீராங்கனை டோணா வேகிச் (28வயது, 20வது ரேங்க்), ஆஸ்திரேலியா வீராங்கனை மாயா ஜாய்ன்ட்(18வயது, 103வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.
இதில் இளம் வீராங்கனை மாயா அபாரா சர்வீஸ்கள் மூலம் முன்னணி வீராங்கனை டோணாவை திணறடித்து, 6-1, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் துபாய் ஓபன் டென்னிஸ் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான கிரீசை சேர்ந்த சிட்சிபாஸ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவுடன் மோதினார். இதில் முதல் 2 செட்டுகளை இருவரும் தலா ஒன்று கைப்பற்றிய நிலையில் 3வது செட் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 7-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். லீக் சுற்றுபோட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் காலிறுதி போட்டிகளுக்கு முன்னணி வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
The post மெரிடா, துபாய் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் படோசா, சிட்சிபாஸ் appeared first on Dinakaran.
