×

நேபாளம் பயணத்துக்கு உதவிய ரைடருக்கு ரூ.12 லட்சம் பைக்கை வாங்கிக் கொடுத்த அஜித்

சென்னை: நேபாளம், பூடான் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்த சுகத் சத்பதி என்பவருக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபள்யூ பைக்கை நடிகர் அஜித்குமார் பரிசளித்துள்ளார்.பைக் சாகச பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுபவர் அஜித். சமீபத்தில் நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளுக்கு பைக்கிலே சென்று வந்தார். அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் தனது சுற்றுப்பயணத்துக்கு உதவி செய்த நபருக்கு விலை மதிப்புள்ள பரிசை அஜித் கொடுத்திருக்கிறார்.

அஜித்துடன் நேபாளம், பூடான் சுற்றுப்பயணத்திற்க அவருடன் கூடவே வந்தவர் சுகத் சத்பதி. அஜித்தின் நேபாளம், பூடான் சுற்றுபயணம், இவர் ஏற்பாடு செய்து கொடுத்ததுதான். இவர் வட இந்தியாவை சேர்ந்தவர். இந்நிலையில் சுகத் சத்பதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபள்யூ பைக் ஒன்றை அவருக்கு பரிசளித்துள்ளார் அஜித். இது பற்றி சமூக வலைத்தளத்தில் சுகத் வெளியிட்ட பதிவில், ‘பயணத்தில் நல்ல மனிதர்களை சந்திப்பீர்கள் என சொல்வார்கள். நானும் அதுபோன்ற ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன். அவர் தென்னிந்தியாவை தாண்டி புகழ் பெற்ற அஜித். எனக்கு எஃப் 85ஜிஎஸ் பைக்கை பரிசளித்தது மறக்க முடியாது’ என்றார்.

The post நேபாளம் பயணத்துக்கு உதவிய ரைடருக்கு ரூ.12 லட்சம் பைக்கை வாங்கிக் கொடுத்த அஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Nepal ,Chennai ,Ajith Kumar ,BMW ,Sugath Sadpathi ,Bhutan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!