×

உடல்நலக் குறைவு; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக வருவாய்த்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பணியாற்றி வருகிறார். 74 வயதான இவர் வழக்கமான பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அவ்வப்போது செல்வார். இந்த நிலையில் நேற்று முன் தின இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு, அவருக்கு பல்வேறு வகையான பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள் குழுவினர், சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர். குறிப்பாக இதயம் தொடர்பாக சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவர் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post உடல்நலக் குறைவு; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Minister ,K.K.S.S.R. Ramachandran ,Chennai ,Revenue Minister of ,Tamil Nadu ,Chennai Thousand Lights Apollo Hospital… ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?