×

அரசு புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்த முயன்ற 2 லாரி, ஜேசிபி பறிமுதல்: உரிமையாளருக்கு வலை

சேலம், பிப். 27: சேலம் அம்மாபேட்டை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ச்சியாக மண் திருட்டு நடந்து வருகிறது. இதையடுத்து சேலம் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அரவிந்த்(30) அந்த பகுதியில் ஆய்வுக்கு சென்றார். அப்போது, மாசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 2 டிப்பர் லாரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் வெட்டிக் அள்ளிக்கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த அரவிந்த், அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் வந்தனர். ஆனால் அதற்குள் அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்த 2 டிப்பர் லாரி மற்றும் 1 ஜேசிபி இயந்திரங்கள், 2 யூனிட் மண் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி, ஜேசிபி இயந்திரங்களில் உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்த முயன்ற 2 லாரி, ஜேசிபி பறிமுதல்: உரிமையாளருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : JCB ,Salem ,Ammapettai ,Salem Mining Department ,Assistant Director ,Aravind ,Masinayakkanpatti ,Dinakaran ,
× RELATED சேரம்பாடி பகுதியில் ஜேசிபி வைத்து மண்...