- பழைய
- இரும்பு குடன்
- Paramathivelur
- Kudon
- பாலசுப்பிரமணியம்
- கபிலார்மலை பெரியசோலிபாளையம்
- பழைய இரும்பு குடன்
- தின மலர்
பரமத்திவேலூர், பிப்.27: பரமத்திவேலூர் அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை பெரியசோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(45). இவர், பழைய இரும்பு மற்றும் பழைய பிளாஸ்டிக் குடோன் வைத்து நடத்தி வருகிறார். பல்வேறு பகுதியில் இருந்து வாங்கி வரப்பட்ட பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பழைய இரும்புகளை குடோனில் குவித்து வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணியளவில் பழைய பிளாஸ்டிக் பொருட்களில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. சிறிது நேரத்தில் மள மளவென பரவியது. அதனை பார்த்த பாலசுப்ரமணியம் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், பெரும் தீ சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இரும்பு சாமான்கள் தீயில் எரிந்து சேதமாகியிருக்கலாம் என தெரிய வருகிறது. சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post பரமத்திவேலூர் அருகே பழைய இரும்பு குடோனில் தீ: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

