- மகா சிவராத்திரி விழா
- நாமக்கல் சித்தர்மலை சிவன் கோவில்
- நாமக்கல்
- இறைவன்
- மகா சிவராத்திரி
- சித்தர்மலை
- நாமக்கல்-மோகனூர் சாலை
நாமக்கல், பிப்.27: நாமக்கல் சித்தர்மலை சிவன் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் -மோகனூர் ரோட்டில் வனத்துறை அலுவலகத்தில் இருந்து, சுமார் 4 கி.மீ., தொலைவில் மலை உச்சியில் சித்தர்மலை அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஜோதி கந்த சந்தன மகாலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, மலைப்பாதையில் இருபுறமும் மின்விளக்குள் பொருத்தப்பட்டு, பாதைகள் சீரமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 5 காலபூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னாதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என ஐந்துகால பூஜை நடைபெற்றது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.
The post நாமக்கல் சித்தர்மலை சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.