- சமயபுரம்
- ஆதி
- மாரியம்மன்
- மாசி மாதம் திருவிழா
- திருச்சி
- அம்பாள்
- ஆதி மாரியம்மன்
- இனாம் சமயபுரம்
- சமயபுரம்…
- ஆதி மாரியம்மன் யானை
திருச்சி, பிப்.27: சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று மரயானை வாகனத்தில் அம்பாள் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் எழுந்தருளுவதற்கு முன் மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோயிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அங்குள்ள கோயில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. சமயபுரம் மாரியம்மனின் அன்னையாகவும் தெற்கிலிருந்து தன் கடைக்கண் அருள் பார்வை கிழக்கில் உள்ள தன் மகளான சமயபுரம் மாரியம்மனை நோக்கி தான் ஆதி மாரியம்மன் காட்சி பெறுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதா தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா கடந்த 9ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் பூச்சொரில் நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று மரயானை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தேரோடும் வீதி வழியாக எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று, பின் கோவிலுக்கு வந்தடைந்தார். முன்னதாக ஆதி மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பூக்களை சாற்றி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
விழாவில் சமயபுரம், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமாத தேரோட்ட விழா வரும் மார்ச் 2ம்தேதி நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உத்தரவின்படி, கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post மாசி மாத திருவிழாவையொட்டி சமயபுரம் ஆதி மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.