- தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி
- தஞ்சாவூர்
- டாக்டர்
- சுமதி
- இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்
- தேசிய நலத்திட்டம்
- தேசிய காடெட் கார்ப்ஸ்
- செஞ்சிலுவை சங்கம்
- தஞ்சாவூர்...
- தின மலர்
தஞ்சாவூர், பிப்.27: தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமையில் யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் செஞ் சுருள் சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைப்பெற்றது.
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ரத்த வங்கியின் குருதிமாற்று அலுவலர் மருத்துவர் கிஷோர்குமார் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். மாநில நாட்டு நலப்பணி அலுவலர் முனைவர் குணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 62 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் சித்திரவேல், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் தங்கத்துரை, பேராசிரியர் உமாமகேஸ்வரி, முனைவர் இளங்கோவன், முனைவர் மலர்வண்ணன், தேசீய மாணவர் படை அலுவலர் முனைவர் சுரேஷ்பாபு, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் முனைவர் சுந்தரமூர்த்தி மற்றும் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேரா. முருகானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர்.
The post தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.