×

புதுப்பட்டினத்தில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணி மும்முரம்

கொள்ளிடம், பிப்.27: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினத்தில் புதியதாக கட்டப்படும் ஊராட்சி செயலாக கட்டிடத்தைச் சுற்றிலும் சாலை வசதி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணி துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது புளியந்துறையிலிருந்து தற்காஸ் செல்லும் சாலையில் கிழக்கு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடம் சாலையிலிருந்து சற்று பள்ளமான பகுதியில் கட்டப்பட்டு வருவதால் புதிய கட்டிடத்தைச் சுற்றிலும் மண் அடித்து நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கட்டிடத்திற்கு சென்று வரும் வகையில் உரிய சாலை வசதி இல்லாமல் இருந்து வருகிறது. அதேபோல் கட்டிடத்தைச் சுற்றிலும் அனைவரும் சென்று வரும் வகையில் உரிய சாலை வசதி இல்லாமல் பள்ளமாக இருந்து வருவதால், கட்டிடத்தைச் சுற்றிலும் நல்ல மண் மற்றும் மணலை கொண்டு நிரப்பி இக்கட்டிடத்திற்கு செல்லும் கிராம மக்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் உரிய சாலை வசதி அமைக்கவும், கட்டிடத்தைச் சுற்றிலும் சுற்றுப்புற சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post புதுப்பட்டினத்தில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Panchayat Secretariat ,Pudupattinam ,Kollidam ,Panchayat ,Pudupattinam Panchayat ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் ஆற்று படுகையில் 2000ல் இருந்து...