- ராக்காச்சி அம்மன்
- ராஜபாளையம்
- இறைவன்
- ரகாச்சி
- அம்மன்
- கோவில்
- மேற்குத்தொடர்ச்சி
- மகா சிவராத்திரி
- ராக்காச்சி அம்மன் கோவில்
- இராஜபாளையம்...
ராஜபாளையம், பிப்.27: மகாசிவராத்திரியை முன்னிட்டு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடுகாட்டில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ராக்காச்சி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடுக்காட்டில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பக்தர்கள் திருவிழா மற்றும் சிவராத்திரி தினங்களில் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு ராக்காச்சி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களான கருப்பசாமி, இரணியன், சங்கிலி பூதத்தான் உட்பட ஏழு பரிவார தெய்வங்களுக்கும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக அம்மன் அருள்வாக்குபடி ஏழுமலை கடந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மூலஸ்தானம் சித்தர் காவு நாணல் பிரம்பு பகுதியில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு ராக்காச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பால், தயிர், திரவியம், குங்குமம், சந்தனம் என 16 அபிஷேகங்களும் ஆராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வருடத்தில் இரண்டு முறை மட்டும் ராக்காச்சி அம்மன் வலது கையில் சிவபெருமானையும் இடது கையில் பெருமாளையும் தனது இடுப்பை சுற்றி ஏழு குழந்தைகளையும் வைத்து காட்சியளிக்கும் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராக்கப்பன் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
The post 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராக்காச்சி அம்மன் கோயிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு: 3 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பூஜை appeared first on Dinakaran.
