×

லாட்ஜ் மேலாளர் கொலை: ராஜஸ்தான் நபருக்கு ஆயுள் தண்டனை

மதுரை, பிப். 27: லாட்ஜ் மேலாளர் கொலை வழக்கில், ராஜஸ்தானைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் மேலாளராக அருப்புக்கோட்டை பாலவநத்தத்தை சேர்ந்த தர்மராஜ்(54) என்பவர் பணியாற்றினார். இவர், கடந்த 2022ம் ஆண்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். வழக்குப் பதிவு செய்த திடீர்நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அதே லாட்ஜில் தங்கியிருந்த ராஜஸ்தானை சேர்ந்த கோபாலகிருஷ்ண தாகா(31) என்பவர் நகைக்காக தர்மராஜை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அரசு தரப்பில் வக்கீல் டி.ராஜேந்திரன் ஆஜரானார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஜோசப்ஜாய் குற்றச்சாட்டுகள் உறுதியானதால் கோபாலகிருஷ்ண தாகாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மதுரை, விளாங்குடியில் மேற்கு சட்டமன்ற தொகுதி பொது உறுப்பினர்கள் கூட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பிரமாண்டமாய் நடத்தினார். அவருக்கு இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா நினைவுப் பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கினார். உடன் இளைஞர் அணி நிர்வாகிகள் அய்யப்பன், அன்புச் செல்வன், அம்சபாண்டி வேல் உள்ளிட்டோர் உள்ளனர்.

The post லாட்ஜ் மேலாளர் கொலை: ராஜஸ்தான் நபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Madurai ,Dharmaraj ,Aruppukottai ,Palavantham ,Town Hall Road ,Dinakaran ,
× RELATED மகனுக்கு பதிலாக தந்தைக்கு ஆபரேஷன்: ராஜஸ்தானில்தான் இந்த அவலம்