×

பாக்.கில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக்கொலை

அமிர்தசரஸ்: பஞ்சாபில் உள்ள பதன்கோட்டில் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள சர்வதேச எல்லையில் தாஷ்பதான் எல்லை புறக்காவல் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபரின் நடமாட்டத்தை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து அந்த நபரை திரும்பி செல்லும்படி வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய நபர் அதனை பொருட்படுத்தாமல் மேலும் முன்னேறியதால் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

The post பாக்.கில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Amritsar ,Border Security Force ,Pathankot, Punjab ,Tashpadan ,Pathankot, Punjab… ,Dinakaran ,
× RELATED ஜம்மு எல்லையில் சுற்றி திரிந்த ஆந்திர நபர் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு