×

திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சுக்கு பாலியல் தொல்லை போலீஸ்காரர் அதிரடி கைது: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு

திருச்சி:திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், போலீஸ்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரித்திகைவாசன்(26), சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக (தனி அறை) கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். பிரித்திகைவாசனின் பாதுகாப்புக்காக பெரம்பலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இளம்ராஜா (35) உள்பட 2 போலீஸ்காரர்கள் சிப்ட் முறையில் பணியாற்றி வந்தனர். நர்சிங் மாணவி ஒருவர் சிகிச்சை அளிப்பதற்காக வந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த இளம்ராஜா, நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நர்சிங் மாணவியிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி திருச்சி ரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாாின்பேரில், ேபாலீசார் போலீஸ்காரர் இளம்ராஜா மீது போக்ேசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்நிலையில், போலீஸ்காரர் இளம்ராஜாவை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஸ் பசேரா உத்தரவிட்டுள்ளார்.

The post திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சுக்கு பாலியல் தொல்லை போலீஸ்காரர் அதிரடி கைது: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trichy government hospital ,SP ,Trichy ,POCSO ,Perambalur ,Prithigaivasan ,Venkatesapuram ,Dinakaran ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனை இருதய...