தேவையான பொருட்கள்:
பலாப்பழம் (நறுக்கி அரைத்தது) – 1 கப்
அரிசிமாவு – 1 கப்
தேங்காய் (கீறி பொடியாக நறுக்கியது) – ½ கப்
வெல்லப்பொடி – 1 கப்
ஏலக்காய்தூள் – ½ டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரிபருப்பு – 10
பாதாம்பருப்பு – 10
செய்முறை:
முதலில், நறுக்கி அரைத்த பலாப்பழத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதில் வெல்லப்பொடி சேர்த்து நன்றாக கலக்கி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு தவாயில் நெய்யை சூடாக்கி, அதில் முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே தவாயில், பாலாப்பழக் கலவையை கொட்டி தொடர்ந்து கிளறி, பின்னர் அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.இந்த கலவை கெட்டியாகி உருண்டு மாறும் போது, இதில் வறுத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை அடுப்பில் இருந்து எடுத்து, சிறிது ஆறியதும் சிறு உருண்டைகள் போல உருட்டி எடுக்கவும். பலாப்பழ உருண்டை தயார்.
The post பலாப்பழ உருண்டை appeared first on Dinakaran.