×

மஞ்சு வாரியரின் ‘ஃபுட்டேஜ்’

திருச்சூர்: ‘அஞ்சம் பாதிரா’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘மஹேஷின்டே பிரதிகாரம்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு எடிட்டராக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்கும் படத்துக்கு ‘ஃபுட்டேஜ்’ என பெயரிட்டுள்ளனர். இதில் முதன்மை வேடத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார். கேரளா மாநிலம், திருச்சூர் நகரில் சிம்னி அணைக்கு அருகில் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இதை மஞ்சு வாரியர் தொடங்கி வைத்தார். இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர்.

மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், பினீஷ் சந்திரன் மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஷப்னா முஹம்மது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து, கூட்டு முயற்சியாக ‘ஃபுட்டேஜ்’ படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஷினோஸ் பணியாற்ற, கலை இயக்குநராக அப்புண்ணி சாஜன் பணியாற்றுகின்றனர். இந்த திரைப்படம் ஃபவுண்ட் ஃபுட்டேஜை பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இந்த முயற்சி, புதிதாக இருக்கும். சுஷின் ஷியாம் பின்னணி இசையை வடிவமைத்துள்ளார்.

The post மஞ்சு வாரியரின் ‘ஃபுட்டேஜ்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Manju Warrier ,Thrissur ,Saiju Sreedharan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருச்சூரில் பூரம் விழாவில் யானைகளை...