* அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளியில் கலந்துரையாடல்
நாகப்பட்டினம் : நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக உருவாக்கிட முடியும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளியில் கலந்துரையாடிய போது தெரிவித்தார்.
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப கணினி நுண்ணறிவு ஆய்வகத்தின் மூலம் பயனடைந்த மாணவர்களிடம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் காணொளி காட்சி மூலம், கலந்துரையாடினர்.
பிரதாபராமபும் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிராமபுற அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் உயர்தொழில்நுட்ப கணினி நுண்ணறிவு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயின்று வரும் மாணவ, மாணவிகளிடம் கணினி ஆய்வகத்தின் பயன்கள் குறித்து கேட்கப்பட்டது. இதுவரை நகர்புற மாணவர்களுக்கு மட்டும் கிடைத்து வந்த உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தை கிராமப்புற மாணவர்களும் பெற முடிந்தது.
இதனால் கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்களும் கணினி தொழில்நுட்பத்தில் கற்றுத்தேர்ந்திட முதல்வர் வழிவகை செய்துள்ளார். இந்த மையம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் STEM தொடர்பான தேடல்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அனுபவத்தின் மூலம் STEM ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது. மாணவர்களை செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் பற்றி அறிய ஊக்குவிப்பதோடு இத்தொழில்நுட்பங்களில் உயர்கல்விக்கான வித்தாக இந்த ஆய்வகம் அமைந்துள்ளது.
ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), , விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் STEM,, இன்குபேஷன் பணிநிலையம் போன்றவற்றின் மூலம் இடைநிலைக் கற்றல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தும். மேம்பட்ட STEM படிப்புகளில் அவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதோடு அவர்களின் புதுமையான யோசனைகளை மாதிரி வடிவமாக மேம்படுத்தி மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான தளத்தையும் வழங்குகிறது.
ரீல்ஸ் என்பது பாடத்தின் முக்கியமான வரையறைகள், கோட்பாடுகள், அடிப்படைக் கருத்துக்கள் போன்றவற்றை 60 வினாடிகளுக்குள் மாணவர்களுக்கு புரியுமாறு எளிதாக விளக்கும் ஒரு புதுமையான முயற்சியாகும். இது நீட், என்.எம்.எம்.எஸ். போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அடித்தளமாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செய்முறையில் ட்ரோன், ரிமோட் இயக்கம் குறித்தும் கிராமப்புற மாணவர்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
முதல்வர் இந்த வசதியை ஏற்படுத்தி தரவில்லை என்றால் எங்களை போன்ற கிராமப்புற மாணவர்கள் இதுபோன்ற தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை. எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் எளிதாக உருவாக்கிட முடியும்.
இந்த பள்ளி மட்டுமின்றி சுற்றுவட்டார அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெற முடிகிறது. சர்வதேச பள்ளிகளுக்கு இணையாக பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை முதல்வர் உயர்த்தி தந்துள்ளார். முதல்வருக்கு நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக உருவாக்கிட முடியும் appeared first on Dinakaran.