- Tarna
- கோவி
- தடாபாத் தலைமை மின்சார வாரியம்
- அமைப்பு
- தமிழ்
- தமிழ்நாடு
- கோய்
- தடாபாத்
- மேயர்
- மதுசூதன்
- தின மலர்
கோவை, பிப். 26: கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு மாநகர் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இதில், டி.மணிகன்டன், எம்.மணிகன்டன் உள்பட கோவை மாநகர், தெற்கு, வடக்கு, கிளைகள் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பகட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்கி, வேலைபளு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2019 டிசம்பர் முதல் 2023ல் மே மாதம் வரை மின்வாரிய பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒப்பந்தம் ஏற்படும் வரை இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கேங்மேன் பதவியை கள உதவியாளர் பதவியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் பணி விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post மின்வாரிய ஊழியர்கள் காலிப்பணியிடம் நிரப்ப வலியுறுத்தி தர்ணா appeared first on Dinakaran.