×

நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கக்கோரி தையல்கலை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர். பிப். 26: நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வாரிய அட்டை வழங்கிட கோரி தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நலவாரிய அட்டையினை உடனடியாக வழங்கிட வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும், வீடு இல்லாத தையல் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் நிதி வழங்கவேண்டும், இலவச இயந்திரம் மற்றும் குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்கவேண்டும்,

நல வாரியத்தின் பண பலன்களை அதிகப்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்புடைய தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரேவதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்ட தலைவர் அனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கக்கோரி தையல்கலை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tailoring Workers' Association ,Welfare Board ,Thiruvarur ,Dinakaran ,
× RELATED விதிமுறைகளின்படி மணல் எடுக்க அனுமதி தர வேண்டும்: பொன்குமார் வலியுறுத்தல்