தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியில் கடந்த 24ம் தேதி சவ ஊர்வலத்தில் நடனமாடும் போது, கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவுடி பிரகாஷ் (20) மற்றும் எதிர் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் தரப்பில் 2 பேரும், எதிர் தரப்பில் கிரி, 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த யுவராஜை பிடிக்க ஆர்.கே.நகர் போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்றபோது, அவர் போலீசாரை பார்த்ததும் கையில் வைத்திருந்த மது பாட்டிலை திறந்து குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து, என்னை பிடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி, கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால், அவரை பிடிக்க போலீசார் தயக்கம் காட்டினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து ரடிவு பிரகாஷ் தப்பி சென்று விட்டார். அவரை தேடி வருகின்றனர்.
The post போலீஸ் கைதுக்கு பயந்து பாட்டிலால் கழுத்தறுத்த ரவுடி appeared first on Dinakaran.