சென்னை: சென்னை, அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஆலோசகர் அன்பரசு என்பவர், அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் மகன் கிரீஷ் ஆகியோருடன், தி.நகர், தங்கவேல் தெருவில் வசித்து வரும் வித்யா (56) என்பவரிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி, ரூ.48 லட்சத்து 50 ஆயிரம் பெற்று மோசடி செய்தனர். புகாரின் பேரில், பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராயப்பேட்டை, முகமது உசேன் தெரு, ஜெயா மேன்சனை சேர்ந்த அன்பரசு (57), என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
The post பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிகலாபம் பெற்று தருவதாக கூறி ரூ.48.50 லட்சம் ஏமாற்றியவர் கைது appeared first on Dinakaran.
