- ஐஐடி மெட்ராஸின் மின்-உச்சி மாநாடு
- கும்ப
- திருவிழா
- ஐஐடி
- காமகோடி
- சென்னை
- தொழில் முனைவோர் உச்சி மாநாடு
- ஐஐடி மெட்ராஸின் தொழில்முனைவோர் பிரிவு
- மின் செல்
- கும்ப மேளா
- தின மலர்
சென்னை: சென்னை ஐஐடியின் தொழில் முனைவோர் பிரிவு நடத்தும் தொழில்முனைவோர் மாநாடு வரும் 28ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐஐடி மெட்ராஸ் தொழில்முனைவோர் பிரிவு (இ-செல்) ஏற்பாடு செய்த இந்த வருடாந்திர நிகழ்வு, ஆர்வமுள்ள தொழில்முனைவோரை இணைக்கும் மையமாகச் செயல்படுகிறது. தொழில் வல்லுநர்கள், பெரிய முதலீட்டாளர்கள், மாணவர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்க செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியதாவது:
இ-உச்சி மாநாட்டில் முதன்முறையாக நிதி திரட்டும் நிகழ்வு நேரடியாக நடக்கிறது. ‘பிட்ச்ஃபெஸ்ட்’ எனப்படும் இந்நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் போட்டியில் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 நிறுவனர்கள், 50க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக செயலாக்கம் கொண்ட சந்தையை இ-உச்சி மாநாடு 2025ல் முதன்முறையாக ‘பிட்-பஜார்’ என்ற பெயரில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிட்ச் டெஸ்ட் (Pitch test) திட்டத்தை உருவாக்கி உள்ளோம். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நடத்துபவர்கள் 15 நிமிடத்தில் அவர்களது தயாரிப்புகள் குறித்து விவரிப்பர்.
இதில் சிறந்த முறையில் உள்ள 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். காசி தமிழ்ச்சங்கத்தை முன்னெடுத்த ஐஐடி, கும்பமேளா போன்ற அதிக அளவிளான மக்கள் வரக்கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு ஏன் கூட்டத்தை கட்டுப்படுத்தக் கூடிய பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளை வழங்கவில்லை என்ற கேள்விக்கு, நாங்கள் அதுபற்றி யோசிக்கவில்லை. அவ்வளவு கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை. மேலும் 144 வருடத்திற்கு ஒருமுறை வரும் கும்பமேளாவை பற்றிய தரவுகள் எங்களிடம் இல்லை என்றார்.
The post சென்னை ஐஐடியின் இ-உச்சி மாநாடு 28ல் தொடக்கம் கும்பமேளா கூட்ட நெரிசல் தவிர்க்க தரவுகள் இல்லை: ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி தகவல் appeared first on Dinakaran.