- கார்கே
- யூனியன் அரசு
- புது தில்லி
- காங்கிரஸ்
- எஸ்.சி.
- செயின்ட்
- ஓ.பி.சி.
- மல்லிகார்ஜுன் கார்கே
- நரேந்திர மோடி
புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு பறித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நரேந்திர மோடி ஜி உங்கள் அரசு நாட்டில் உள்ள எஸ்சி,எஸ்டி, ஒபிசி மற்றும் சிறுபான்மை பிரிவு இளைஞர்களின் உதவித்தொகையை பறித்துவிட்டது.
மோடி அரசானது அனைத்து உதவித்தொகைகளிலும் பயனாளிகளை வெகுவாக குறைத்துள்ளது மட்டுமில்லாமல் சராசரியாக ஆண்டுதோறும் 25 சதவீதம் குறைவான நிதியையும் செலவிட்டுள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றது. நாட்டின் பலவீனமான பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் வரை அவர்களின் திறன் ஊக்குவிக்கப்படாது, நாட்டில் இளைஞர்களுக்கான வேலையை நம்மால் எவ்வாறு அதிகரிக்க முடியும்? எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வோம் என்ற உங்களின் முழக்கமானது ஒவ்வொரு நாளும் பலவீனமான பிரிவுகளின் விருப்பங்களை கேலி செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post எஸ்சி, எஸ்டி, ஓபிசி உதவித்தொகை குறைப்பு: ஒன்றிய அரசு மீது கார்கே சாடல் appeared first on Dinakaran.