×

ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற குழுவிடம் பிரியங்கா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பாஜ எம்பியும் முன்னாள் சட்ட அமைச்சருமான பி.பி.சவுத்ரி தலைமையில் 39 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 கூட்டங்களை நடத்திய இக்குழு 3வது முறையாக நேற்று கூடியது.

இதில், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி யு.யு.லலித் ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல செயல்முறை என்றாலும் அதை சீராக செயல்படுத்த பல விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அரசின் நிதி சேமிக்கப்படுவதோடு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என சட்ட ஆணைய தலைவர் ரிது ராஜ் அவஸ்தி வரவேற்றார்.

அதே சமயம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கருத்தை எதிர்த்தனர். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ‘‘சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை சீர்குலைப்பதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயல், மக்கள் உரிமையை மீறும் செயல்’’ என எதிர்ப்பு தெரிவித்தார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற குழுவிடம் பிரியங்கா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Priyanka ,One Nation ,One Election Parliamentary Committee ,New Delhi ,Lok Sabha ,BJP ,Law Minister ,P.P. Chowdhury… ,One Nation, One Election Parliamentary Committee ,Dinakaran ,
× RELATED எல்லாமே பா.ஜ கட்டுப்பாட்டில்...