×

நண்பருக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேச சென்றவரை வெட்டிய வாலிபர்கள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி திடீர் நகரை சேர்ந்தவர் கோபி (29), பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி காந்திபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 பேர், கோபியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கோபியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த விநாயகம் (23), விஜயன் (25), முரளி (எ) முனியா (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட கோபி வீட்டின் அருகில் விநாயகம் மற்றும் சங்கர் ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் கோபி தலையிட்டு பஞ்சாயத்து பேசியுள்ளார். இந்த பிரச்னையில் கோபம் அடைந்தவர்கள் கோபியை வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து விநாயகம், விஜயன், முரளி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post நண்பருக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேச சென்றவரை வெட்டிய வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Panchayat ,PERAMPUR ,KOBI ,VIASARPADI SUDDEN ,Vyasarbadi Gandhipuram ,Dinakaran ,
× RELATED ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது