- Senthamangalam
- தலைமை அமைச்சர்கள்
- மருந்தக திறப்பு விழா
- முதன்மை வேளாண் கூட்டுறவு வங்கி
- காளப்பநாயக்கன்பட்டி
- Erumapatti
- பிராந்திய அட்மா குழு
- ஜனாதிபதிகள்
- அசோக் குமார்
- பாலசுப்பிரமணியம்
- கூட்டுறவு துணைப் பதிவாளர்
- நாகராஜன்
- தின மலர்
சேந்தமங்கலம், பிப்.26: சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி மற்றும் எருமப்பட்டி பகுதிகளில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடந்தது. வட்டார அட்மா குழு தலைவர்கள் அசோக்குமார், பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தனர். கூட்டுறவு துணைப்பதிவாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பேரூர் திமுக செயலாளர் தனபாலன், முருகேசன் வரவேற்றுப் பேசினர். விழாவில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு 3 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் பாப்பு, துணைத் தலைவர் ரகு ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விமலா சிவக்குமார், கூட்டுறவு சார் பதிவாளர் ஜோதிஸ்வரி, பத்மப்பிரியா, நிர்மலா, கூட்டுறவு சங்க செயலாளர்கள் இளங்கோவன், ராஜூ, குள்ளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் மருந்தகம் திறப்பு appeared first on Dinakaran.