- அங்கன்வாடி மையம்
- கருங்குழி பேரூராட்சி
- செல்வம்
- எம்.எல்.ஏ சுந்தர்
- மதுராந்தகம்
- சட்டமன்ற உறுப்பினர்
- சுந்தர்
- நிதி
- கருங்குஜி
- காஞ்சிபுரம்
- கருங்குழி நகரம்
மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்பி செல்வம், எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் திறந்து வைத்தனர். மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி ஆதிவாசி நகர் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், பேரூராட்சி தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர் சங்கீதா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் அனைவரும் வரவேற்றார்.
இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து, மேலவலம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல்லை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், மலைபாளையம் கிராமத்தில் சிறிய அரங்கமும் திறந்து வைக்கப்பட்டது.
The post கருங்குழி பேரூராட்சியில் ரூ.15 லட்சத்தில் அங்கன்வாடி மையம்: எம்பி செல்வம், எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.