×

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் மனு பாக்கர் தலைமையில் 35 பேர் அணி பங்கேற்பு : அர்ஜென்டினாவில் ஏப்.1ல் துவக்கம்

புதுடெல்லி: அர்ஜென்டினா, பெரு நாடுகளில் நடைபெறவுள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் தலைமையிலான 35 பேர் கொண்ட அணி பங்கேற்க உள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அர்ஜென்டினாவின் பியுனஸ் அயர்ஸ் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 35 வீரர், வீராங்கனைகள், சமீபத்தில் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்ற மனு பாக்கர் தலைமையில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த போட்டிகளை தொடர்ந்து, பெரு நாட்டின் லிமா நகரில் வரும் ஏப்ரல் 13 முதல் 22ம் தேதி வரை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற உள்ளன. மனு பாக்கர் தலைமையிலான இந்திய அணியில், அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, ஈஷா சிங், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சிப்ட் கவுர் சம்ரா, சிரியங்கா சடாங்கி, பிரித்விராஜ் தொண்டைமான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

 

The post உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் மனு பாக்கர் தலைமையில் 35 பேர் அணி பங்கேற்பு : அர்ஜென்டினாவில் ஏப்.1ல் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Manu Bhaker ,World Cup ,Argentina ,New Delhi ,India ,Peru ,Dinakaran ,
× RELATED உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர்