- சாம்பியன்ஸ்
- மட்டைப்பந்து
- இந்தியா
- நியூசிலாந்து
- துபாய்
- சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் சர்வதேச
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி
- தின மலர்
துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 3வது முறையாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் ஆடிவரும் இந்தியா இதுவரை 2 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் வங்கதேசத்தையும், 2வது போட்டியில் பாகிஸ்தானையும் இந்தியா வீழ்த்தியது.
அதனால் ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று ஏற்கனவே அரையிறுதியை இந்தியா உறுதி செய்து விட்டது. இதற்கு முன், 2013, 2017ம் ஆண்டுகளில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளிலும் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போது 3வது முறையாக தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறி, ஹாட்ரிக் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன் 1998, 2000, 2002 ஆண்டுகளில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளிலும் இந்தியா அரை இறுதிக்கு தொடர்ந்து முன்னேறி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. 2002ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து அணியும் தான் விளையாடிய 2 போட்டிகளிலும் பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வென்று 4 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்துள்ளது. ஏ பிரிவில், நியூசி, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டதால், அதில் உள்ள பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன. போட்டியை நடத்தும் நடப்பு சாம்பியன் நாடான பாக். லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளது. இந்தியா எஞ்சியுள்ள ஒரு போட்டியில் மார்ச் 2ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடிக்கும்.
The post சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்குள் நுழைவதில் இந்தியா ஹாட்ரிக் சாதனை: நியூசிலாந்தும் தகுதி பெற்றது appeared first on Dinakaran.