- எல்லபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
- Uthukkottai
- எல்லாபுரம்
- வடக்கு ஒன்றிய தி.மு.க
- வேலை
- குழு
- லட்சிவாக்கம் கிராமம்
- நிர்வாக குழு
- எல்லாபுரம் வடக்கு ஒன்றியம்
- பி. ஜே மூர்த்தி
- சிவசங்கர்
- ராமமூர்த்தி
- தின மலர்
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சிவசங்கர், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், பேரூர் செயலாளர் அபிராமி, ஒன்றிய நிர்வாகிகள் தண்டலம் ரவி, குணசேகர், டில்லி சங்கர், ஜமுனா அப்புன், ராஜேஷ், இளைஞரணி அமைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சம்பத், சண்முகம், மொய்தீன், வழக்கறிஞர்கள் சீனிவாசன், முனுசாமி, சுமன், வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.