×

நிதி வசதி இல்லாத கோயில்களுக்கு சிவராத்திரி பூஜை பொருட்கள்

பெரியபாளையம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நிதி வசதி இல்லாத கோயில்களுக்கு, சிவாலய திருத்தொண்டு இயக்கம் சார்பில், சிவராத்திரி அபிஷேக பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவாபுரியைச் சுற்றியுள்ள காரணி, மங்கலம், கொசவம்பேட்டை, கண்டிகை, மல்லியங்குப்பம், அகரம் முதலிய 40 கிராமங்களில் உள்ள நிதி வசதி இல்லாத கோயில்களுக்கு, சிவாலய திருத்தொண்டு இயக்கம் சார்பில், சிவராத்திரியன்று இரவில் சிவபெருமானுக்கு நான்கு காலங்களிலும் அபிஷேகம் செய்திட பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்தது. இதில், அந்தந்த கோயில்களின் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரிகள் செந்தில்குமார், மாதவன், அர்ச்சகர் ஆனந்த குருக்கள், இந்து முன்னணி காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.ராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜான்சிராணி ராஜா, பாஜ சோழவரம் ஒன்றிய தலைவர் கிஷோர்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post நிதி வசதி இல்லாத கோயில்களுக்கு சிவராத்திரி பூஜை பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Periypalayam ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvallur ,Sivalaya Thirutondu Movement ,Thiruvallur district ,Siruvapuri ,Mangalam ,Kosavampettai ,Kandigai ,Malliyanguppam ,Agaram ,
× RELATED தாமரைப்பாக்கம் அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை